112வது தேவர் ஜெயந்தி விழா 2019
மேட்டுப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 112 வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா. மேட்டுப்பாளையம் அக்டோபர் 31 மேட்டுப்பாளையம் தேவர் நலச் சங்கம் சார்பில் பசும்பொன் தேவர் ஐயா 102வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா குடும்ப விழா என முப்பெரும் விழா மேட்டுப்பாளையம் தமிழ்ச்சங்க அரங்கத்தில் நடைபெற்றது விழாவிற்கு சங்க தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் பொன்னையன் வரவேற்று பேசினார் பொருளாளர் பழனிக்குமார் துணைச் செயலாளர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில். மகளிர் அணி நிர்வாகிகள் ராஜலட்சுமி அகிலா விஜயகுமாரி யோகேஸ்வரி சுமதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர் தேவர் அய்யாவின் உருவப் படத்துக்கு சங்க தலைவர் சுப்பிரமணியம், தொழிலதிபர் டிஆர் சண்முகசுந்தரம், நாசர், மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். விழாவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு குழந்தைவேலு அகிலா, விஜயகுமாரி ராஜலட்சுமி ஆகியோர் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. விழா...