மேட்டுப்பாளையம் தேவர் நலச்சங்கம் சார்பில் பசும்பொன் தேவர் 111 வது பிறந்தநாள்,குருபூஜை விழா.
















மேட்டுப்பாளையம் தேவர் நலச்சங்கம் சார்பில் பசும்பொன் தேவர் 111 வது பிறந்தநாள்,குருபூஜை விழா.
மேட்டுப்பாளையம்.அக்டோபர் 31மேட்டுப்பாளையம் தேவர் நலச்சங்கம் சார்பில் பசும்பொன் தேவர் 111 வது பிறந்தநாள்,மற்றும் குருபூஜை விழா.குடும்பவிழா நடைபெற்றது.மேட்டுப்பாளையம் தமிழ் சங்க மண்டபத்தில் நடந்த விழாவிற்கு சங்க தலைவர் எஸ்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.துணை செயலாளர் புகழேந்தி,மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.துணைத்தலைவர் எஸ்.பொன்னையன் வரவேற்று பேசினார். முன்னதாக மகளிரணி சு.ராஜலட்சுமி,கே.அகிலா,பி.விஜயகுமாரி,.மற்றும் தலைவர் சுப்பிரமணியன்,துணைத்தலைவர் பொன்னையன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிவைத்து தேவர் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி  செலுத்தினார்கள்.தொடர்ந்து நிர்வாகிகள்,உறுப்பினர்கள் தேவரின் திருஉருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.
\பின்னர் நடைபெற்ற விழாவில் ஏ.கே.செல்வராஜ் எம்,பி.சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 10 மற்றும்  பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற  மாணவ மாணவிகளுக்கு சங்கத்தின் சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் சூரியா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சுப்பையா,கே.டி.எஸ்.துரைராஜ்,அணைத்து இந்து சமுதாய சங்க நந்தவன தலைவர் எல்.ஐ.சி.பொன்னுசாமி,நோட்டரி வக்கீல் வீரபத்திரன்,நகராட்சி அலுவலர் ஜெயராமன்,ஆகியோர் வாழ்த்திப்பேசினார்கள்.
விழாவில் டாக்டர் சுதாகர்,நாசர், மருதுபாண்டியன்,நிர்வாகக்குழு உறுப்பினர்கள் குழந்தைவேலு,அய்யாசாமி,சுகுமார்,ஆறுமுகம்,சங்கரலிங்கம்,ஸ்ரீனிவாசகன்,அஜித்குமார்,அசோகன்,உட்பட தேவர் நலச்சங்க உறுப்பினர்கள்  குடுப்பத்தினர் கலந்துகொண்டனர்.சங்க உறுப்பினர்களின் குடும்பத்திற்கு நினைவு பரிசுகளை தலைவர் சுப்பிரமணியம் வழங்கினார்.முட�
[10/31, 1:30 PM] Yuvaraj: முடிவில் செயலாளர்  எம்.நாகமாணிக்கம் நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

112வது தேவர் ஜெயந்தி விழா 2019

தேவர் ஜெயந்தி விழா 2017