மேட்டுப்பாளையம் தேவர் நலச்சங்கம் சார்பில் பசும்பொன் தேவர் 111 வது பிறந்தநாள்,குருபூஜை விழா. மேட்டுப்பாளையம்.அக்டோபர் 31மேட்டுப்பாளையம் தேவர் நலச்சங்கம் சார்பில் பசும்பொன் தேவர் 111 வது பிறந்தநாள்,மற்றும் குருபூஜை விழா.குடும்பவிழா நடைபெற்றது.மேட்டுப்பாளையம் தமிழ் சங்க மண்டபத்தில் நடந்த விழாவிற்கு சங்க தலைவர் எஸ்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.துணை செயலாளர் புகழேந்தி,மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.துணைத்தலைவர் எஸ்.பொன்னையன் வரவேற்று பேசினார். முன்னதாக மகளிரணி சு.ராஜலட்சுமி,கே.அகிலா,பி.விஜயகுமாரி,.மற்றும் தலைவர் சுப்பிரமணியன்,துணைத்தலைவர் பொன்னையன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிவைத்து தேவர் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.தொடர்ந்து நிர்வாகிகள்,உறுப்பினர்கள் தேவரின் திருஉருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். \பின்னர் நடைபெற்ற விழாவில் ஏ.கே.செல்வராஜ் எம்,பி.சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சங்கத்தின் சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கி...